/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதிய கழிப்பறை இன்றி பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம்; காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் அலட்சியம்
/
போதிய கழிப்பறை இன்றி பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம்; காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் அலட்சியம்
போதிய கழிப்பறை இன்றி பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம்; காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் அலட்சியம்
போதிய கழிப்பறை இன்றி பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம்; காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் அலட்சியம்
ADDED : ஜூலை 23, 2025 12:27 AM

தேனி; தேனி ஒன்றியம், காட்டுநாயக்கன்பட்டி வடக்குதெருவில் போதிய கழிப்பறை வசதி இல்லாதததால் பெண்கள் திறந்த வெளியை பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி ஊராட்சி ஒன்றியம், காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் 7 வார்டுகள் உள்ளன. இக் கிராமத்தில் வடக்கு தெருவில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன.
இக் கிராமத்தில் குண்டும், குழியுமான ரோடு, எரியாத தெருவிளக்கு, பெண்கள் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகம் செய்து தராததால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக குடியிருப்போர் புலம்புகின்றனர்.
குடியிருப்போர் காளீஸ்வரி, கவுரியம்மாள், சாரதா, ஷியாமளா ஆகியோர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் குடிநீர் குழாய் அமைக்க ரோடுகளில் பள்ளம் தோண்டினர். ஆனால், இதுவரை ரோடு சீரமைக்கவில்லை.
இதனால் ரோடு மேடு, பள்ளங்களாக இருப்பதால் இரவில் குழந்தைகள், முதியவர்கள் தடுமாறி விழுகின்றனர். சில இடங்களில் தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியாமல் காட்சி பொருளாக உள்ளன.
வீட்டு உபயோகத்திற்காக இரு இடங்களில் தரைமட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பயன்பாடின்றி உள்ளது. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இப்பகுதியில் பலர் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.
ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையை ஆண்கள், பெண்கள் பயன்படுத்துகிறோம்.
இந்த கழிப்பறை வளாகம் மக்கள் பயன்பாட்டிற்காக காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மட்டும் செயல்படுகிறது.
அந்த சுகாதார வளாகத்திலும் ஒரே நேரத்தில் 4 பேர் மட்டும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் பலரும் திறந்த வெளியை பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது.
திறந்த வெளியை பயன்படுத்தும் போது பலரும் விஷப்பூச்சிகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இப்பகுதியில் கழிவு நீர் சாக்கடை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. ஊராட்சியில் முறை யிட்டாலும் அதனை துார்வருவதில்லை. கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது.
இதனால் பலர் காய்ச்சலால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை. சிலருக்கு மட்டும் தொடர்ச்சியாக வழங்குகின்றனர்.
இரவில் காட்டுநாயக்கன்பட்டி பிரிவு வழியாக செல்லும் பஸ்களில் பலர் வேலை முடித்து திரும்புகின்றனர். ஆனால் காட்டுநாயக்கன்பட்டி பிரிவில் இருந்து கிராமம் வரை இரு புறமும் போதிய வெளிச்சம் இல்லை.
இதனால் அச்சத்துடன் பெண்கள், மாணவர்கள் வீடு திரும்பும் நிலை உள்ளது. விளக்கு வசதி ஏற்பட்டுதிடவும், சாக்கடைகளை சீரமைக்கவும், புதிய சுகாதார வளாகம் அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.