/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்குவதில் பாரபட்சம் ஊராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

ADDED : டிச 20, 2024 03:28 AM
போடி: போடி அருகே சிலமலை ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதில் பாராபட்சம் காட்டுவதாக கூறி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சியில் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 1885 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். தற்போது சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட சூலப்புரம் அருகே 18ம் கால்வாய் தூர்வாரும் பணி, மல்லிங்காபுரம், சிலமலை வடத்தான்குளம் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு 400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் செய்து வருகின்றனர். சூலப்புரம் கண்மாய், சிலமலை குறிஞ்சியப்பன் கண்மாய் ஆழப்படுத்தும் பணிகள் செய்திட பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வேலைக்கு பயனாளிகள் தேர்வு செய்வதில் பாரபட்சம் காண்பிப்பதாகவும், உரிய பயனாளிகளுக்கு வேலை வழங்க கோரி கூறி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போடி தாலுாகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பயனாளிகள் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.