/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் கூடைப்பந்து போட்டி பி.டி.சி., அணி சாம்பியன்
/
மகளிர் கூடைப்பந்து போட்டி பி.டி.சி., அணி சாம்பியன்
மகளிர் கூடைப்பந்து போட்டி பி.டி.சி., அணி சாம்பியன்
மகளிர் கூடைப்பந்து போட்டி பி.டி.சி., அணி சாம்பியன்
ADDED : ஜன 25, 2024 05:54 AM

-பெரியகுளம்: பெரியகுளத்தில் மாவட்ட மகளிர் கூடைபந்தாட்ட போட்டியில் பி.டி.சி., அணி சாம்பியன்பட்டம் வென்றது.
பெரியகுளத்தில் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட மகளிர் கூடைப்பந்து போட்டி இரு தினங்கள்
லீக்சுற்று மற்றும் நாக் அவுட் போட்டிகளாக நடந்தது. இந்த போட்டியில் பெரியகுளம் பி.டி.சி., நினைவு கூடைப்பந்து அணி, தோட்டக்கலை கல்லூரி அணி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி அணி, தேனி நாடார் சரஸ்வதி கலை கல்லூரி, பொறியியல் அணி, போடி ஹூப் ஸ்டார் அணி ஆகிய 6 அணிகள் விளையாடினர்.
இப் போட்டியில் முதலிடம் பிடித்த பி.டி.சி., நினைவு கூடைப்பந்து அணிக்கு, வர்த்தக பிரமுகர் சீனிவாசன் கோப்பை, பரிசு வழங்கினார். 2ம் இடம் பிடித்த தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரிக்கு நல்லாசிரியர் வாசுதேவன் பரிசு வழங்கினார்.
மூன்றாம் இடம் பிடித்த போடி ஹூப்ஸ்டார் அணிக்கு, பரிசினை வர்த்தக பிரமுகர் ரத்தினவேல் வழங்கினார். நான்காம் இடம் பிடித்த நாடார் சரஸ்வதி கலை கல்லூரி அணிக்கு ஆசிரியர் ஜான் ராஜமாணிக்கம் வழங்கினார். ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. அழைத்துப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய சிறந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு வர்த்தக பிரமுகர் முஜிபுர் ரகுமான் வழங்கினார்.
பரிசளிப்பு விழாவிற்கு சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழக செயலாளர் சிதம்பர சூரியவேலு தலைமை வகித்தார். துணைத் தலைவர் அபுதாஹிர், பொருளாளர் டாக்டர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வர் சேசுராணி, வர்த்தக பிரமுகர்கள் மணிகார்த்திக், அன்புக்கரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.