/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தண்ணீர் இன்றி 21 ஆண்டுகளாக பூட்டிய பெண்கள் சுகாதார வளாகம்
/
தண்ணீர் இன்றி 21 ஆண்டுகளாக பூட்டிய பெண்கள் சுகாதார வளாகம்
தண்ணீர் இன்றி 21 ஆண்டுகளாக பூட்டிய பெண்கள் சுகாதார வளாகம்
தண்ணீர் இன்றி 21 ஆண்டுகளாக பூட்டிய பெண்கள் சுகாதார வளாகம்
ADDED : ஜூலை 13, 2025 12:29 AM

கம்பம்: கம்பமெட்டு காலனியில் 21 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் மகளிர் சுகாதார வளாகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
கம்பத்தில் இருந்து கம்பமெட்டு செல்லும் ரோட்டில் உள்ளது கம்பமெட்டு காலனி. 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இக் காலனியில் பொது சுகாதார வளாகம் இல்லை. 2004 ல் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு, கட்டியதிலிருந்து பயன்படுத்தப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. சலவை செய்யவும், குளிக்கவும் மற்றும் கழிப்பறைகளும் ஒரே இடத்தில் கட்டப்பட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
இது பற்றி நகராட்சியில் விசாரிக்கையில், சுகாதார வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை.
கழிவு நீரை கடத்துவதற்கு வழியில்லை. பிற பகுதிகள் மேடாகவும், சுகாதார வளாகம் பள்ளத்திலும் அமைந்துள்ளது. எனவே சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டது, என்றனர்.
பல லட்சம் அரசு நிதி செலவு செய்து கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி செய்து பயன்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இருக்கும் இடத்தை ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றும் முன் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.