/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை கிளை நிலையத்தில் 'ஹெல்மெட்' அணிந்து பணி
/
கால்நடை கிளை நிலையத்தில் 'ஹெல்மெட்' அணிந்து பணி
ADDED : மார் 08, 2024 01:28 AM

பெரியகுளம்:வடுகபட்டி கால்நடை கிளை நிலைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெண் ஆய்வாளர் 'ஹெல்மெட்' அணிந்து பணி செய்ய வேண்டிய அபாயநிலை உள்ளது.
பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட கட்டடத்தில் அரசு கால்நடை மருத்துவ கிளை நிலையம் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 வரை செயல்படும். அப் பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிளை நிலைய கட்டடத்தின் கூரை சேதமடைந்த, கான்கீரிட் இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது.
சில மாதங்களுக்கு முன் ஆய்வாளர் பணி செய்த போது கூரையிலிருந்து சிறிய அளவிலான சிமென்ட் கான்கீரிட் பெயர்ந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக தலையில் விழாமல் டேபிளில் விழுந்தது. இதனால் கட்டட கூரையின் அபாய நிலையை உணர்ந்து கிளை நிலையத்தில் 'ஹெல்மெட்' அணிந்து பணிபுரிகிறார். ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்குள் பெரியகுளம் ஒன்றிய நிர்வாகம் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

