/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓடையில் பாலம் அமைக்க தடையில்லா சான்று வழங்காததால் பணி முடக்கம்
/
ஓடையில் பாலம் அமைக்க தடையில்லா சான்று வழங்காததால் பணி முடக்கம்
ஓடையில் பாலம் அமைக்க தடையில்லா சான்று வழங்காததால் பணி முடக்கம்
ஓடையில் பாலம் அமைக்க தடையில்லா சான்று வழங்காததால் பணி முடக்கம்
ADDED : பிப் 02, 2025 06:28 AM

பெரியகுளம் : விவசாயிகள் கடந்து செல்லும் வாரி வாய்க்கால் ஓடையில் பாலம் கட்டுமானப்பணிக்கு நிதி ஒதுக்கியும். நீர் வளத்துறை தடையில்லா சான்று வழங்காததால் பால பணி முடங்கி உள்ளது.
வடுகபட்டி பேரூராட்சி 4 வது வார்டு ராஜேந்திர விநாயகர் கோயில் அருகே வாரி வாய்க்கால் செல்கிறது. தாமரைக்குளம் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர், சேடபட்டி ஓடை வழியாக இந்தப்பகுதியை கடந்து, மேல்மங்கலம் வராகநதியில் கலக்கிறது. இந்த ஓடையை கடந்து தான் வெற்றிலைக்கொடிக்கால், தென்னந்தோப்பு உட்பட நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியும். மழை காலங்களில் தண்ணீர் அதிகளவில் செல்லும் போது, நிலங்களுக்கு இடு பொருட்கள் கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஒரு கி.மீ., தூரம் மாற்றுப்பாதையில் செல்லும் நிலை உள்ளது.
கடந்தாண்டு தரைப்பாலத்தில் சென்ற பலர் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். இதில் ஒருவர் இறந்துள்ளார்.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வடுகபட்டி பேரூராட்சியில் வாரிஓடை வாய்க்கால் குறுக்கே 15 வது நிதிக்குழு மானியத்தில் பாலம் கட்டுமானப்பணிக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தடை இல்லா சான்றிதழ் தாமதம்: தரைத்தளத்திலிருந்து 16 அடி உயரம், 12 மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டது.
நீர்வளத்துறை பாலம் கட்டுமானப்பணிக்கு 10 மாதங்களாக தடையில்லா சான்றிதழ் வழங்காமல் உள்ளது.
இது குறித்து பேரூராட்சி தலைவர் நடேசன் கூறுகையில், 'தினமும் ஏராளமான விவசாயிகள் செல்லும் பாதையில் நீர் வளத்துறை விரைந்து தடையில்லா சான்று வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றார்.--