/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.4.21 கோடி செலவில் ரோடு பாலம் அமைக்கும் பணி தீவிரம்; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : நவ 06, 2025 07:13 AM

போடி: ராசிங்காபுரத்தில் இருந்து - ஒண்டி வீரப்பசாமி கோயில் வரை ரூ.4.21 கோடி செலவில் புதிதாக ரோடு, பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
போடி அருகே ராசிங்காபுரத்தில் இருந்து ஒண்டிவீரப்பசாமி கோயில் வரை ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. டூவீலர் கூட செல்ல முடியாத அளவிற்கு ரோடு குண்டும், குழியுமாக இருந்தன. ஒண்டி வீரப்பசாமி கோயிலுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் சேதம் அடைந்த ரோட்டில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வர சிரமம் அடைந்தனர். இந்த ரோட்டில் விளக்கு வசதி இல்லாததால் இரவில் சேதம் அடைந்த ரோடு தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சில நேரங்களில் விபத்தும் ஏற்பட்டன.
இது குறித்து தினமலர் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் ராசிங்காபுரம் ஊராட்சி அலுவலகம் முதல் ஒண்டிவீரப்பசாமி கோயில் வரை 6 கி.மீ., தூரம் நபார்டு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.21 கோடி மதிப்பில் புதிதாக ரோடு, பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.