/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
8 குளங்கள் ரூ.59.36 லட்சத்தில் துார்வாரும் பணி தீவிரம்
/
8 குளங்கள் ரூ.59.36 லட்சத்தில் துார்வாரும் பணி தீவிரம்
8 குளங்கள் ரூ.59.36 லட்சத்தில் துார்வாரும் பணி தீவிரம்
8 குளங்கள் ரூ.59.36 லட்சத்தில் துார்வாரும் பணி தீவிரம்
ADDED : செப் 24, 2025 06:33 AM
தேனி : மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனுார் வட்டாரத்தில் 8 குளங்கள் ரூ. 59.36 லட்சத்தில் துார்வாரும் பணி நடந்து வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில 24 குளங்கள், 465 ஊருணிகள் உள்ளன. இவற்றில் சில குளங்கள், ஊருணிகளை துார்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: உத்தமபாளையம், சின்னமனுார் வட்டாரங்களில் உள்ள 8 குளங்கள் சுமார் 59.36 லட்சம் மதிப்பில் சீரமைப்ப பணிகள் மேற்கொள்ளபடுகின்றன. உத்தமபாளையம் வட்டாரத்தில் டி.சிந்தலைச்சேரி கரிசல் குளம் ரூ. 10.86 லட்சம், டி.மீனாட்சிபுரம் அழகர்செட்டிகுளம் ரூ.9.8 லட்சம், அழகர்நாயக்கன்குளம் ரூ.11.96லட்சம், லட்சுமிநாயக்கன்பட்டி பழனிசெட்டிகுளம் ரூ. 7.86லட்சம், தம்மிநாயக்கன்குளம் ரூ. 5.21 லட்சம், தம்பி நாயக்கன்பட்டி பெரியநாயக்கன்குளம் ரூ. 4.27 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சின்னமனுார் வட்டாரத்தில் முத்துலாபுரம் பெரியகுளம் ரூ. 5.84லட்சம், வேப்பம்பட்டி தாடிக்காரன்குளம் ரூ. 3.38 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து, இந்த குளங்களில் நீரை தேக்கினால் அப்பகுகளில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயரும் என்றார்.