/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18 பேரூராட்சிகளில் தெருவிளக்குகள் எல்.இ.டி.க்களாக மாற்றும் பணி துவங்கியது இரு ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு

ADDED : டிச 05, 2024 06:32 AM
கம்பம்: தேனி மாவட்டத்தில் 18 பேரூராட்சிகளில் தெரு விளக்குகளில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்த டெண்டர் பெற்ற நிறுவனம் தற்போது பணியை துவக்கி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தெருவிளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை -2022 ல் அரசாணை பிறப்பித்தது.
அதனை பேரூராட்சிகளின் ஆணையரகம் செயல்படுத்த அனுமதி வழங்கியது. அந்த அனுமதியை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற டெண்டர் 2023 ஜனவரியில் அப்போதைய உதவி இயக்குநரால் விடப்பட்டது.
ரூ.4 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில், 7236 எல்.இ.டி. விளக்குகள் புதிதாக பொருத்த விடப்பட்ட டெண்டரை, தனியார் நிறுவனம் எடுத்தது. ஆனால் டெண்டர் பெற்ற நிறுவனம் 2 ஆண்டுகளாக தெருவிளக்குகள் பொருந்தும் பணியை மேற்கொள்ளவில்லை. இதற்கு அரசாணை வெளியான பின்பு, பேரூராட்சி நிர்வாகங்கள், தனியாரிடம் தெருவிளக்கு பராமரிப்பிற்கு தனியாக மின் பொருள்கள் வாங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பேரூராட்சிகளில் 2 ஆண்டுகளாக பழுதடைந்த தெருவிளக்குகளை பழுது நீக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இரு ஆண்டுகள் பணிகளை துவக்காத நிலையில், தற்போது டெண்டர் பெற்ற நிறுவனம், பணிகளை துவக்க முன் வந்துள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் அனுமதிக்கப்பட்ட அளவு எல். இ.டி. பல்புகள் மற்றும் பிட்டிங்குகளை இறக்கி வருகிறது. விரைவில் அதை பொருத்தும் பணிகள் நடைபெறும் என தெவித்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகளை தவிர்த்து, மீதமுள்ள 18 பேரூராட்சிகளில் தெருவிளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி துவங்குகிறது.