/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியும் பணி தீவிரம்
/
பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியும் பணி தீவிரம்
ADDED : பிப் 18, 2026 07:15 AM
தேனி: மாவட்டத்தில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிய முந்தைய தேர்தல்களின் ஓட்டுப்பதிவு, மோதல், அடிதடி வழக்குகள் பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. தொகுதிகளில் ஓட்டுச்சாவடிகள் அடிப்படையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் கடந்த தேர்தல்களில் மோதல்கள், அடிதடி வழக்குகள் பதிவான ஓட்டுச்சாவடிகள் பற்றி கணக்கெடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் வன்முறைகள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகள் பற்றியும் ஆய்வு செய்து பதட்டமான ஓட்டுச்சாவடிகள் குறித்து அறிக்கை தயாரித்து வருகின்றனர்.

