/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்
/
போடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவக்கம்
ADDED : ஜன 24, 2025 05:26 AM

போடி: போடி மெயின் ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி  நேற்று துவங்கியது.
தமிழக, கேரளாவை இணைக்கும் மூணாறு மெயின் ரோட்டில் போடி அமைந்து உள்ளது. தினமும் தமிழக, கேரளா பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வந்து செய்கின்றனர்.
போடி காமராஜ் பஜார், தேவாரம் மெயின் ரோட்டில் பிளாட்பார கடைகள், தட்டிகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். . இதனால் 60 அடி அகல ரோடு 30 அடியாக சுருங்கியது. போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமம் அடைந்தனர்.ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் ஷஜீவனா நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார். கடந்த மாதம் ரோட்டின் இருபுறமும் சர்வே செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றி கொள்ள   பிரசாரம் செய்யப்பட்டது. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் பலர் தாங்களாகவே  அகற்றி கொண்டனர்.
நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், தலைமையில் உதவி பொறியாளர் ராஜாராம், போடி  நகரமைப்பு ஆய்வாளர் சுகதேல், சர்வேயர் ரியாசுதீன்,  இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் காமராஜ் பஜார், கட்டபொம்மன் சிலை ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நேற்று பெரியாண்டவர் ஹைரோடு, போஜன் பார்க், திருமலாபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

