ADDED : ஜன 03, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு; மூணாறு அருகே தலையார் எஸ்டேட், சட்ட மூணாறு டிவிஷனை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளி கணேசன் 38. இவர், நேற்று முன்தினம் மாலை பசுக்களுக்கு தீவனம் சேகரிக்க செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இவர், அப்பகுதியில் உள்ள காபி தோட்டத்திற்கு இரவில் காவல் காக்கும் பணிக்கு செல்வது வழக்கம் என்பதால் குடும்பத்தினர் பெரிதுபடுத்தவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் கணேசன் மரத்தில் பிணமாக தொங்கியதை நேற்று காலை சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பசுக்களுக்கு தீவனம் சேகரித்துக் கொண்டிருந்தபோது எதிர் பாராத வகையில் மரக்கிளை மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரியவந்தது. மறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

