/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : டிச 20, 2024 03:26 AM

தேனி: தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு செய்த பெரியகுளம் ஒன்றியத்தை சேர்ந்த முத்துப்பாண்டிக்கு 46, என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரியகுளம் ஒன்றியத்தை சேர்ந்த இத்தம்பதிக்கு 11 வயது மகள் உள்ளார். 2023 அக். 26ல் தாய் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு, மதுரைக்கு சென்றிருந்தார். அப்போது அலைபேசியில் உறவினர் அழைத்து, மகள் அழுதுகொண்டு இருப்பதாக தெரிவித்தார். வீட்டிற்கு வந்த தாய் சிறுமியிடம் விசாரித்தார்.
சிறுமி, விளையாடிக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த பெரியகுளம் ஒன்றியத்தை சேர்ந்த முத்துப்பாண்டி, சிறுமியிடம் அலைபேசியை காண்பித்து, உங்கள் அம்மா அலைபேசியில் பேசுறாங்க. வா பேசு என தெரிவித்து, வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்தார். தாயார் புகாரில், முத்துப்பாண்டி மீது தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். முத்துப்பாண்டி பெரியகுளம்நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்நடந்தது. நேற்று விசாரணை முடிந்து குற்றவாளி முத்துப்பாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.