ADDED : ஏப் 04, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி வினோபா நகரைச் சேர்ந்தவர் அஸ்வின் குமார் 20. தேவதானப்பட்டி மின்துறை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக  பணி புரிந்து வந்தார்.
வேலை முடிந்து வீட்டிற்கு டூவீலரில் கெங்குவார்பட்டி ஜி.கல்லுப்பட்டி ரோட்டில்  செல்லும்போது மண்டுகருப்பணசாமி கோயில் அருகே, எதிரே வந்த டிராக்டர் டூவீலர் மீது மோதியது. இதில் காயமடைந்த அஸ்வின் குமார், மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து ஏற்படுத்திய ஜி.கல்லுப்பட்டி அரசமரத்தெருவைச் சேர்ந்த வசந்தகுமாரிடம் 25. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-

