ADDED : நவ 01, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சி சங்கரமூர்த்திபட்டி தெற்கு தெரு முருகன் 58. பாண்டி என்பவரது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் போது, முருகனை பாம்பு கடித்தது. தனது மனைவி தேவக்கனியிடம் விபரத்தை தெரிவித்தார்.
தேனி மருத்துவமனைக்கு முருகன் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர் முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-

