ADDED : நவ 14, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறு அருகே கே.
டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான குண்டளை எஸ்டேட், புதுக்கடி டிவிஷனை சேர்ந்தவர் தொழிலாளி செந்தில்குமார் 38. இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதே பகுதியில் மனைவி தனியாக வசிக்கிறார். இன்று (நவ.,14) காலை செந்தில்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
