/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு இரட்டை 'ஆயுள்'
/
மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு இரட்டை 'ஆயுள்'
மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு இரட்டை 'ஆயுள்'
மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு இரட்டை 'ஆயுள்'
ADDED : மே 05, 2025 03:47 AM

மூணாறு: மூணாறு அருகே 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கிய வழக்கில், தேயிலை தோட்ட கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, இடுக்கி பைனாவ் அதிவிரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம், மூணாறு அருகே கோவிலுார் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி, 32. இவர், 2021 ஆக., 4ல், 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவரிடம் இருந்து தப்ப முயற்சித்து சிறுமி கூச்சலிட்டதால், அவரது முகத்தில் கல்லால் கொடூரமாக தாக்கினார்.
பேச்சுச்திறன் இல்லாத நிலையில், வலிப்பு நோயாலும் பாதிக்கப்பட்ட அச்சிறுமி வீட்டிற்கு சென்று, தனக்கு நேர்ந்த கொடுமையை சைகை மூலம் விளக்கினார்.
இதில், தேவிகுளம் இன்ஸ்பெக்டர் சிவலால் தலைமையில், போலீசார் அந்தோணியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, இடுக்கி பைனாவ் அதிவிரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அந்தோணிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும், 3.11 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி லைஜூமோள் ஷெரீப், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.