/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு நிம்மதி இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்
/
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு நிம்மதி இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு நிம்மதி இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு நிம்மதி இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்
ADDED : டிச 19, 2024 05:50 AM

மூணாறு: மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளன.
குறிப்பாக யானைகள் பகல், இரவு என ரோடு, தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் நடமாடுவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர்.
தவிப்பு: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு குடியிருப்பு பகுதியில் ஒன்றை கொம்பன் ஆண் காட்டு யானை நடமாடியது.
அதன் பிறகு டாப் டிவிஷன் ரோட்டில் சென்றதால், மூணாறு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பணி முடிந்து வீடு திரும்ப இயலாமல் தவித்தனர். தவிர அதே பகுதியில் நான்கு யானைகளை கொண்ட கூட்டமும் நடமாடியதால் இரவில் தொழிலாளர்கள் தூக்கத்தை இழந்தனர்.
அதேபோல் மாட்டுபட்டி எஸ்டேட் பகுதியில் இரண்டு நாட்களாக முகாமிட்ட பிரபல படையப்பா ஆண் காட்டு யானை பகலில் ரோடுகளில் நடமாடியது.
திருவிழா: தற்போது மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கோயில்களில் திருவிழாக்களை நடத்த தயாராகி வருகின்றனர். அவர்கள் முளைப்பாரியிட்டு, அதற்கு இரவில் 10:00 வரை பாட்டு பாடி, பூஜைகள் செய்து வீடு திரும்புகின்றனர்.
அவர்களுக்கு காட்டு யானைகளால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதனால் வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.