/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேலை உறுதித் திட்ட சம்பளம் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு: அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊராட்சிகள்
/
வேலை உறுதித் திட்ட சம்பளம் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு: அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊராட்சிகள்
வேலை உறுதித் திட்ட சம்பளம் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு: அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊராட்சிகள்
வேலை உறுதித் திட்ட சம்பளம் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு: அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊராட்சிகள்
ADDED : ஜன 24, 2025 05:30 AM
ஆண்டிபட்டி: - ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் செய்த தொழிலாளர்கள் இரு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
கிராம ஊராட்சிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலைக்கு உறுதி அளிக்கும் விதமாக மத்திய அரசு மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 200 முதல் ஆயிரம் வரையிலான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். சுழற்சி முறையில் இவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் குளம், நீர் வரத்து வாய்க்கால் தூர்வாருதல், பண்ணை குட்டை, மண் வரப்பு, அகழி அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பராமரித்தல் ஆகிய பணிகள் தேர்வு செய்யப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.290 சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் உள்ள விவசாயக் கூலி தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுகின்றனர்.
திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பணித்தல பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மூலம் கணக்கிடப்பட்டு வேலையில் ஈடுபட்டவர்களுக்கான சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு வாரமும் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
கடந்த இரு வாரமாக பணிகள் முடித்த தொழிலாளர்களுக்கு அரசு மூலம் சம்பளம் வழங்கப்படவில்லை. பணிகள் செய்ததற்கான சம்பளம் எப்போது கிடைக்கும் என்ற தவிப்பில் தொழிலாளர்கள் உள்ளனர்.
10 ஆயிரம் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகளை மேற்கொள்கின்றனர். வாரம் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை முடிந்த பணிகளுக்கு பணம் கிடைத்துவிடும். தற்போது இரு மாதங்களாக நிலுவை உள்ளது. தற்போது ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகை நிலுவையில் உள்ளது. தைப்பொங்கல் பண்டிகைக்கு அரசு மூலம் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

