/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிகரிக்கும் லாட்டரி விற்பனை நம்பி ஏமாறும் தொழிலாளர்கள
/
அதிகரிக்கும் லாட்டரி விற்பனை நம்பி ஏமாறும் தொழிலாளர்கள
அதிகரிக்கும் லாட்டரி விற்பனை நம்பி ஏமாறும் தொழிலாளர்கள
அதிகரிக்கும் லாட்டரி விற்பனை நம்பி ஏமாறும் தொழிலாளர்கள
ADDED : ஆக 31, 2025 04:12 AM
தேனி: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் துண்டுசீட்டு லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால் தொழிலாளர் பலரும் தினமும் பலநுாறு ரூபாயை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கேரளா எல்லை அருகே அமைந்துள்ளது. கேரளா மற்றும் வடமாநிலங்களில் லாட்டரி விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் லாட்டரி விற்பனை தடை செய்து பிற மாநில லாட்டரிகள் விற்பது குற்றம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கேரள லாட்டரிகள் தேனி மாவட்டத்தில் தேனியில் தாரளாமாக விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் வழக்குகள் பதிவு செய்தாலும் பலரும் குமுளி, இடுக்கி, மூணாறு உள்ளிட்ட இடங்களில் இருந்து வாங்கி வந்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
இது தவிர வடமாநில லாட்டரி சீட்டுகள் கணினி மூலம் விற்கிறோம் என சிலர் ‛துண்டு சீட்டு'களில் மூன்று முதல் 6 இலக்க எண்களை எழுதி கொடுத்து விற்பனை செய்கின்றனர். இதனை ரூ. 60 முதல் ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். அதிர்ஷ்டம் விழும் ஒரே நாளில் லட்சாதிபதி ஆகலாம் என்ற கணக்கில் பல கூலித்தொழிலாளர் வாங்குகின்றனர். இதற்காக சம்பளத்தில் பெரும் தொகையை செலவிடுகின்றனர். சட்ட விரோத ‛துண்டு சீட்டு' லாட்டரி விற்பனையால் பலரும் பணத்தை குடும்பங்களில் அமைதி கெட்டு வருகிறது. இவ்வகையான லாட்டரி விற்பனையை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.