/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க.,கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணியாளர்கள் தர்ணா பி.சி., பட்டி பேரூராட்சியில் சுகாதார பணி பாதிப்பு

ADDED : பிப் 10, 2024 05:55 AM

தேனி: ஒருமையில் பேசிய தி.மு.க., கவுன்சிலர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்காத பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பேரூராட்சியின் அனைத்து பணியாளர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கூட்டம் ஜனவரி 31ல் நடந்தது. தி.மு.க., 3வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் கூட்டத்திற்கு வந்தார். அப்போது பெண் கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டிருந்த குடிநீர் மேற்பார்வையாளர் மணிகண்டனை ஒருமையில் அழைத்து செல்வராஜ் திட்டினார்.
துணைத் தலைவர் மணிமாறன், ஊழியரை ஒருமையில் திட்டியது கண்டிக்கத்தக்கது. தலைவர் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.
தலைவர் மிதுன்கரவர்த்தி, ஊழியர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். பணியாளர் மணிகண்டன், உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க, தலைவர், செயல் அலுவலரிடம் புகார் அளித்தார். விளக்கம் அளிக்கும்படி கவுன்சிலர் செல்வராஜூக்கு,தலைவர் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதில் இல்லை.
இந்நிலையில் தி.மு.க., கவுன்சிலர் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் 50 பணியாளர்கள் பங்கேற்றனர். இதனால் பேரூராட்சியில் சுகாதாரம், குடிநீர் வழங்கல் பணிகள் பாதிக்கப்பட்டன.