/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துணை ஆணையர் முன்னிலையில் முடிந்த ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் ஏற்க மறுப்பு 25ம் நாளாக தொடரும் வேலை நிறுத்தம்

ADDED : ஜன 25, 2025 02:10 AM

ஆண்டிபட்டி:திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையர் சுப்பிரமணியன் முன்னிலையில் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று முன் தினம் முடிந்த 13 சதவீதம் கூலி உயர்வு ஒப்பந்தத்தை சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை 25ம் நாளாக தொடர்கின்றனர்.
தேனி மாவட்டம், சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இரு ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படுத்தப்படும் கூலி உயர்வு ஒப்பந்தம் டிச., 31ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஜன.,1 முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
தொழிற்சங்க பிரதிநிதிகள், விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் 13 சதவீதம் கூலி உயர்வு கொடுப்பதாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதனை சில தொழிற்சங்கங்கள் ஏற்று கையெழுத்திடவில்லை. புதிய ஒப்பந்தம் குறித்து நேற்று காலை சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்களுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்து கேட்டனர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் நுால் பெற்று சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு புதிய ஒப்பந்தத்தால் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் பிரச்னை குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.