ADDED : ஆக 24, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கல்லுாரியில் இயற்பியல் துறை சார்பில் விண்மீன் வியப்புக்கள், விண்வெளி பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் பயிற்சி பட்றை நடந்தது.
பேராசிரியர் ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன் பங்கேற்று, விண்வெளி ஆய்வு, தொலைநோக்கியின் பயன்பாடுகள் உள்ளிட்டவை பற்றி பேசினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், கல்லுாரி செயலாளர் மாறன்மணி, கல்லுாரி முதல்வர் சித்ரா பங்கேற்றனர். இயற்பியல் துறைத்தலைவர் மீனாம்பிகை,கல்லுாரி துணை முதல்வர்கள் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தனர்.