ADDED : அக் 02, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் மாநில அளவிலான பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். பெங்களுரூ கிரைஸ்ட் பல்கலை உதவி பேராசிரியர் ஜெஹோசன் ஜூரேஸ், மதுரை அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் இளங்கோ பங்கேற்றனர். ஆங்கில புலமையை மேம்படுத்துதல், செயற்கை மென்னறிவு மூலம் ஆங்கிலப் புலமை, தகவல் பரிமாற்றம், ஆங்கில மொழி கற்றல், எழுத்து வடிவு, சைகை முறையில் ஆங்கில மேம்பாடு உள்ளிட்டவை பற்றி பேசினர். ஆங்கிலத்துறை தலைவர் வளர்மதி பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தார்.