/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உலக மாற்றுத்திறனாளிகள் தின ஓவியப் போட்டி
/
உலக மாற்றுத்திறனாளிகள் தின ஓவியப் போட்டி
ADDED : நவ 22, 2025 03:34 AM
தேனி: ஆண்டுதோறும் டிச.3ல் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் போட்டியை துவக்கி வைத்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மாவட்ட அலுவலர் காமாட்சி முன்னிலை வகித்தார். மூடநீக்கியல் தொழில்நுட்பஉதவி அலுவலர் பிரபு, உரிமைகள் நலத்துறையின் முதன்மை வல்லுநர் புவியரசன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். ஓவியப் போட்டிகளில் காதுகேளாத, பார்வைத்திறன் குறைபாடு, கை கால் குறைபாடு உள்ள, இதர குறைபாடுள்ள மாணவ, மாணவிகள் 90 பேர் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வகையான ஓவியங்கள் வரைந்தனர். 4 ஓவிய ஆசிரியர்கள் பங்கேற்று திறனாய்வு செய்தனர்.

