sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு

/

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு


ADDED : ஜூன் 07, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் தலைமை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸாண்டர், உதவி வன அலுவலர்கள்அரவிந்த், சிசில் கில்பர்ட் பங்கேற்றனர்.

ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் சி.இ.ஓ., இந்திராணி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள், ஊர்வலம் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பள்ளிகல்வித்துறை துணை ஆய்வாளர் வெங்கடேசன் ஒருங்கிணைத்தனர்.

அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு எஸ்.எஸ்.ஏ., உதவி திட்ட மோகன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

போடி: சிலமலை அரசு மேல் நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மண்வளம் பாதுகாப்பு போடி ரேஞ்சர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வனவர்கள் சங்கர், விசு, மோகன்ராஜ், வனக்குழு தலைவர் வடமலை முத்து, பள்ளித் தலைமையாசிரியர் அமுதா, உதவி தலைமையாசிரியர் அட்சயா, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செல்லத்துரை, உடற்கல்வி ஆசிரியர் அருள் சகாய சுந்தர், தி கிரின் லைப் பவுண்டேஷன் நிர்வாக குழு உறுப்பினர் அர்ஜுனன் முன்னிலை வகித்தனர்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுப்பது குறித்த பதாகைகள் ஏந்தி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். கொய்யா, மந்தாரை, சிவ குண்டலம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தாமல் பாதுகாப்பது, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து வனத்துறையினர் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.






      Dinamalar
      Follow us