தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ உலக சுற்றுச்சூழல் தின விழா

உலக சுற்றுச்சூழல் தின விழா

உலக சுற்றுச்சூழல் தின விழா


ADDED : ஜூன் 06, 2025 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் வனத்துறை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.

பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்' என்ற தலைப்பில் கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுமத்ராதேவி தொகுத்து வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் தனவேல் ஒருங்கிணைத்தார். சமூக ஆர்வலர் மீனாட்சிசுந்தரம் பேசினார். ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் லோகேஷ் குமார் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விளையாட்டு மைதானத்தில் 'பீட் பிளாஸ்டிக் பொலுஷன்'(BEAT PLASTIC POLLUTION)என்று ஆங்கிலத்தில் எழுத்து வடிவில் மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எஸ்.ரெங்கநாதபுரம் பத்மா ராமசாமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் ஆண்டிபட்டியில் நடந்தது. ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கிய ஊர்வலம் மெயின் ரோடு வழியாக சக்கம்பட்டி வரை சென்றது. ஊர்வலத்தில் பள்ளி முதல்வர் மீனா குமாரி தலைமை வகித்தார்.

200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பதாகைகள் ஏந்தி கோஷமிட்டுசென்று விழிப்புணர்வுஏற்படுத்தினர்.

போடி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உப்புக்கோட்டை பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்று நடும் விழா நடந்தது.

பள்ளி செயலாளர் லட்சுமிவாசன் தலைமை வகித்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் பச்சையப்பா ராஜா, தலைமையாசிரியர் புவனேஸ்வரி, ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் தங்கம்மாள் முன்னிலை வகித்தனர். பசுமைப் படை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.

சமூக ஆர்வலர்கள் சிவராஜ், சின்ன வீரமுத்து கலந்து கொண்டு மரக் கன்றுகள் வழங்கினர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பதாகைகள் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us