/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் உலக புலிகள் தின கொண்டாட்டம்
/
பள்ளியில் உலக புலிகள் தின கொண்டாட்டம்
ADDED : ஜூலை 30, 2025 07:05 AM

கம்பம்; உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29 ல் கொண்டாடப்படுகிறது. கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் உலக புலிகள் தின விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம்,கட்டுரை போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமையில் மாணவர்கள் புலிகள் முகமூடி அணிந்து புலிகளை காப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.
தாளாளர் பேசுகையில், 'இந்தியாவில் 58 புலிகள் காப்பகங்கள் உள்ளன. 2024 கணக்கெடுப்பு படி 3682 புலிகள் இந்தியாவில் உள்ளன. வனம் இருக்க வேண்டும் என்றால் புலி இருக்க வேண்டும் . எனவே ஒவ்வொருவரும் புலிகளை காக்க உறுதி மொழி எடுப்போம் என்றார். பின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கட்டுரை, பேச்சு, வினாடி வினா , ஓவிய போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் மலர்விழி, ஆசிரியை உமாதேவி, மேலாளர் விக்னேஷ் ஒருங்கிணைத்தனர்.