sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உலக ஈர நில தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

/

உலக ஈர நில தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக ஈர நில தினம் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக ஈர நில தினம் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 21, 2024 05:14 AM

Google News

ADDED : ஜன 21, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், தேசிய பசுமைப்படை, 'லா' தொண்டு நிறுவனம் சார்பில் உலக ஈர நிலை தினம் கொண்டாடப்பட்டது. கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அழகு சிங்கம் தலைமை வகித்தார்.

வனவர் செல்வபிரபு, மயிலாடும்பாறை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, வேளாண்மைத்துறை உதவி அலுவலர் சுருளி, உதவி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், திட்ட அலுவலர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உலக ஈர நிலை தினத்தை கொண்டாடும் விதம் அவற்றை பாதுகாப்பது குறித்து பேசினர். 'உணவு ஊட்டும் ஈர நிலத்திற்கு உயிர் ஊற்றுவோம், ஈர நிலங்களை காப்போம், பூமியின் எதிர்காலத்தை காப்போம், ஈர நிலங்கள் நன்னீரின் முதன்மை ஆதாரம், ஈர நிலங்கள் இயற்கையின் சரணாலயங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் ஊர்வலம் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் காயத்ரி, தொண்டு நிறுவன பணியாளர்கள் தனசேகரன், வர்ஷினி, கிருஷ்ணபிரியா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us