/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீரிழிவு நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சளி பரிசோதனையும் கட்டாயம்
/
நீரிழிவு நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சளி பரிசோதனையும் கட்டாயம்
நீரிழிவு நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சளி பரிசோதனையும் கட்டாயம்
நீரிழிவு நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சளி பரிசோதனையும் கட்டாயம்
ADDED : ஜன 14, 2025 05:56 AM
கம்பம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நீரிழிவு நோயாளிகளில் தினமும் குறைந்தது 15 பேர்களுக்கு எக்ஸ்ரே, சளிப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காசநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு காச நோய் எளிதில் தாக்கும். சர்க்கரை நேரியாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வரும் சர்க்கரை நோயாளிகளில் குறைந்தது 15 பேர்களையாவது குறிப்பாக முதியவர்களை எக்ஸ்ரே மற்றும் சளிப் பரிசோதனை பண்ண பொதுச் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எக்ஸ்ரே சோதனை மட்டும் நடத்த கூறினர். தற்போது சளிப் பரிசோதனையும் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பலவற்றில் எக்ஸ்ரே கருவிகளோ, சளிப்பரி சோதனை செய்ய தொழில் நுட்ப உதவியாளர்கள், ஆய்வகம் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனையை உறுதிப்படுத்த எம்.டி. டாக்டர்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

