/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதிய ஒன்றிய அலுவலகத்தில் ேஹாமம் நடத்தியும் பயன்பாட்டிற்கு வரவில்லை

ADDED : செப் 22, 2024 03:40 AM

சின்னமனூர்,: சின்னமனூர் ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் கட்டுமான பணி நிறைவு பெறாததால் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது.
மாநிலம் முழுவதும் ப ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கம்பம், சின்னமனூர், தேனி உள்ளிட்ட ஒன்றியங்களில் தலா ரூ.3.50 கோடியில் கட்டுமான பணிகள் சில ஆண்டுகளாக நடந்தது. கடந்த மாதம் கம்பம், தேனி ஒன்றிய அலுவலக புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சின்னமனூர் ஒன்றிய அலுவலக கட்டட பணிகள் நிறைவு பெறாததால் திறப்பு விழா காணவில்ல.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் புதிய கட்டடத்தில் ஹோமம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்து பால் காய்ச்சியுள்ளனர். புரட்டாசியில் பால் காய்ச்ச கூடாது என்பதற்காக கடந்த வாரமே பூஜை நடைபெற்றுள்ளது.
இதில் ஒன்றிய தலைவர், அவரது கணவர் உள்ளிட்ட ஒரு சிலரே ேஹாமம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் இன்னும் கட்டடத்தில் எஞ்சிய பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் புதிய கட்டட பணிகள் நிறைவுசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.