/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் பொறி அட்டை
/
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் பொறி அட்டை
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் பொறி அட்டை
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் பொறி அட்டை
ADDED : டிச 12, 2025 06:22 AM
கம்பம், தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண பொறி அட்டை மற்றும் ஒட்டுண்ணிகளை தோட்டக்கலைத் துறை இலவசமாக வழங்குகிறது,
தற்போது தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் குறையும் அபாயம் உள்ளது . இதைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை மஞ்சள் வண்ண பொறி அட்டை, ஒட்டுண்ணிகளை வழங்குகிறது. இது குறித்து உதவி இயக்குநர் பாண்டியன் ராணா கூறுகையில், தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண பொறி அட்டை ஏக்கருக்கு 10 வழங்குகிறோம் .
விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவி இந்த அட்டையை தோப்பில் கட்ட வேண்டும். வெள்ளை ஈக்கள் மஞ்சள் வண்ணத்தால் கவரப்பட்டு அட்டையில் ஒட்டிக் கொள்ளும் .
ஒரு ஏக்கருக்கு 400 ஒட்டுண்ணிகள் தருகிறோம். இந்த ஒட்டுண்ணி அட்டைகளை தென்னந்தோப்பில் கட்டி விட வேண்டும். இந்த அட்டையிலிருந்து குஞ்சு பொறித்து நன்மை தரும் பூச்சிகள் வெளியே வந்து வெள்ளை ஈக்களை பிடித்து சாப்பிட்டு விடும். இதன் மூலம் தென்னை மரங்களை வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து காப்பாற்றலாம். தேவைப்படும் தென்னை விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

