/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அண்ணன், தங்கை வெட்டி கொலை கணவர், மாமனார் தலைமறைவு
/
அண்ணன், தங்கை வெட்டி கொலை கணவர், மாமனார் தலைமறைவு
அண்ணன், தங்கை வெட்டி கொலை கணவர், மாமனார் தலைமறைவு
அண்ணன், தங்கை வெட்டி கொலை கணவர், மாமனார் தலைமறைவு
ADDED : டிச 12, 2025 04:26 AM

போடி: குடும்ப பிரச்னையில் அண்ணன், தங்கையை வெட்டிக்கொன்ற, தங்கையின் கணவர், மாமனாரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன்செட்டிபட்டியில் வசிப்பவர் சிவக்குமார், 52. இவரது மகன் பிரதீப், 27. இருவரும் அ.ம.மு.க., நிர்வாகிகள். இருவர் மீதும் போடி தாலுகா போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சின்னமனுார் நகர முன்னாள் தி.மு.க., செயலர் நாகராஜ். இவரது மகள் நிகிலா, 25; உத்தமபாளையம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தார்.
நிகிலா, பிரதீப்பிற்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நிகிலா கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
நிகிலா, அவரது அண்ணன் விவேக், 35, மற்றும் சிலர், திம்மிநாயக்கன்பட்டியில் உள்ள பிரதீப் வீட்டிற்கு நேற்று சென்றனர். திருமணத்தின் போது நிகிலாவிற்கு வரதட்சணையாக வழங்கிய பொருட்களை திரும்ப கேட்டுள்ளனர்.
அப்போது, ஆத்திரமடைந்த பிரதீப், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விவேக்கை சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த நிகிலாவை, பிரதீப், பிரதீப்பின் தந்தை சிவக்குமார் இருவரும் சேர்ந்து கத்தி, அரிவாளால் வெட்டினர். பலத்த காயமடைந்த நிகிலா, விவேக் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சம்பவ இடத்தில் எஸ்.பி., சினேஹாபிரியா, தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தினர். இறந்த அண்ணன், தங்கை உடல்களை தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போடி தாலுகா போலீசார், தப்பி ஓடிய சிவக்குமார், பிரதீப்பை தேடி வருகின்றனர்.

