/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயறு வகை விதைகள் வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை
/
பயறு வகை விதைகள் வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை
பயறு வகை விதைகள் வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை
பயறு வகை விதைகள் வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை
ADDED : டிச 12, 2025 04:20 AM
கம்பம்: பயறு வகை விதைகள், நுண்ணூட்ட உரம், பயோ பெர்ட்டிலைசர் ஆகியவற்றை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மானாவாரி நிலங்களில் சாகுபடியாகும் சோளம், கம்பு, தினை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய விதைகளும், பயறு வகை விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் துறை வழங்குகிறது. இவை வேளாண் துறை டெப்போக்களில் விற்கப் படுகிறது. இவற்றை பெறுவதில் சில சமயம் சிரமம் உள்ளன. ஒரு சில வட்டாரங்களில் விவசாயிகள் நீண்ட துாரத்தில் உள்ள வேளாண் டெப்போவிற்கு செல்ல வேண்டியுள்ளது.
இதை தவிர்க்க விதைகளை ஒவ்வொரு ஊரிலும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யவும், நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்களையும் விற்க அறிவுறுத்தி உள்ளது. ஏற்கெனவே பயிர் கடன் வழங்குவது, உரம் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வரும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் அந்த பணிகளுடன் சிறுதானிய விதைகள், பயறு வகை விதைகளையும் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
வேளாண் டெப்போக்களில் இருந்து விதைகள், உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் விற்பனை செய்து அதற்குரிய கட்டணத்தை , சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். விதை விற்பனை செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரு சதவீத கமிஷன் வழங்கப்படும். உயிர் உரங்களுக்கு கமிஷன் இல்லை. இது தொடர்பாக நேற்று நடந்த காணொலி காட்சி ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

