ADDED : ஜன 14, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; வேளாண் பொறியியல் துறை சார்பில் அலைபேசி மூலம் மின்மோட்டர் இயக்குதல், பழைய மின்மோட்டார்களை புதுப்பித்தல் செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
அதே போல் தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் சாகுபடி செய்ய உழவு மானியம் ஒரு ஏக்டேருக்கு ரூ.5400 வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் இரு எக்டேர் வரை விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் தேனி, உத்தமபாளையத்தில் உள்ள வேளாண் பொறியில் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை நேரில் அணுகலாம் அல்லது 99407 02357 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.