/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 10, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மத்திய அரசால் அசோக சக்ரா என்ற வீர தீர விருது வழங்கப்படுகிறது. துணிச்சல், சுயதியாகம், வீரதீர செயல்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
காவல் படை, மத்திய துணை ராணுவம், ரயில்வே பாதுகாப்பு படை, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
வீர தீர செயல்கள் 2023 ஆக.,15க்குப்பின் நடந்திருந்தால் மட்டும் பரிசீலிக்கப்படும்.
தகுதி உள்ளவர்கள் https://theni.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நன்னடத்தை சான்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.