/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கணக்காளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
கணக்காளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 04, 2025 04:39 AM
தேனி,: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணக்காளர் பணியிடத்திற்கு ஓராண்டு ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடத்தில் பணிபுரிய வணிகவியல் அல்லது கணிதவியல் பாடப்பரிவில்இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியம். ஓராண்டு பணி அனுபவம் கட்டாயம். கம்ப்யூட்டரில் டிப்ளமோ அல்லது டேலி முடித்து, 42 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இப்பணியிடம் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் http://theni.nic.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களின் நகல்களில் கையெழுத்திட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த பல்துறை வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தேனி - 625 531 என்ற முகவரிக்கு ஜன.18க்குள் அனுப்பி பயன் பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.