/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 30, 2025 06:56 AM
தேனி; தமிழ் வளர்ச்சித்துறையால் தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ்செம்மல் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விருது, பரிசுத்தொகை ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பத்தை தமிழ்வளர்ச்சித்துறையின் www.tamilvalrchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
சுயவிபரக்குறிப்பு, பரிந்துரை கடிதங்கள், வெளியிட்டுள்ள புத்தங்கள், வெளியிட்டுள்ள ஆவணங்கள், புகைப்படங்கள் இணைந்து, ஆதார் நகல் உள்ளிட்டவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில்உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆக.,20க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் அல்லது 91596 68240 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.