/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தானியங்கி சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
/
தானியங்கி சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தானியங்கி சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தானியங்கி சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 05, 2025 06:50 AM
தேனி : ''தானியங்கி சொட்டு நீர் பாசனக் கருவி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.' என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தோட்டக்கலைத்துறை சார்பில் பூமலைக்குணடு கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் அலைபேசி மூலம் இயக்கக்கூடிய வகையிலான சொட்டு நீர் பாசனக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
தானியங்கி கருவியின் செயல்பாடு பற்றி தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா ஆய்வு செய்தார். உதவி இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தோட்டக்கலை அலுவலர்கள் கூறுகையில், ''சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்வதால் வேலை பழு குறையும், நீர் வீணாவது தவிர்க்கப்படும்.
மேலும் தானியங்கி கருவி அலைபேசி உடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதால் நிலத்தின் ஈரத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்சலாம். மின் சாரத்தை சிக்கனம் செய்ய முடியும்.
விவசாயிகள் தானியங்கி சொட்டுநீர் பாசனக் கருவி அமைக்க ஒரு எக்டேருக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் 300 எக்டேரில் சொட்டுநீர் பாசனத்துடன் தானியங்கி கருவி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தானியங்கி கருவி அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்., என்றனர்.

