/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
/
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 01, 2025 05:32 AM
தேனி: கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற விரும்பும் 17 வயது நிரம்பிய, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மற்றும் கல்லுாரியில் இளநிலை முதுநிலை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பிப்பவர்கள் தனிநபர், குழு போட்டிகளில் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்றிருக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் ஏப்.,6 மாலை 5:00 மணிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். தேர்வு போட்டிகள் ஏப்.,8 ல் சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கம், எம்.ஆர்.கே., ஹாக்கிஸ்டேடியம், நேருபார்க் ஆகிய இடங்களில் காலை 7:00 மணி முதல் நடக்கிறது.

