/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழை சிப்பம் கட்டும் அறை பயன்படுத்த விண்ணப்பிக்கலாம்
/
வாழை சிப்பம் கட்டும் அறை பயன்படுத்த விண்ணப்பிக்கலாம்
வாழை சிப்பம் கட்டும் அறை பயன்படுத்த விண்ணப்பிக்கலாம்
வாழை சிப்பம் கட்டும் அறை பயன்படுத்த விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 22, 2025 02:43 AM
தேனி: சின்னமனுாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாழை சிப்பம் கட்டும் அறை, குளிரூட்டப்ட்ட சேமிப்பு கிடங்கு பயன்படுத்த விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: சின்னமனுார் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 1000 ச.மீ., பரப்பில் வாழை சிப்பம் கட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட முன் குளிரூட்டும் அலகு வசதிகள் உள்ளது. இந்த குளிரூட்டும் மையம், சிப்பம் கட்டும் அறைக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் தரச்சான்று பெறப்பட்டுள்ளது. இதனை ஒப்பந்த முறையில் விவசாயிகள், விவசாய உற்பத்தி குழுவினர் பயன்படுத்தலாம். அதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம், என்றனர்.

