sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உங்கள் ஊராட்சி: 'ஜல்ஜீவனில்' அரை குறையாக கைவிடப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி; சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் சுருளிப்பட்டி ஊராட்சி

/

உங்கள் ஊராட்சி: 'ஜல்ஜீவனில்' அரை குறையாக கைவிடப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி; சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் சுருளிப்பட்டி ஊராட்சி

உங்கள் ஊராட்சி: 'ஜல்ஜீவனில்' அரை குறையாக கைவிடப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி; சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் சுருளிப்பட்டி ஊராட்சி

உங்கள் ஊராட்சி: 'ஜல்ஜீவனில்' அரை குறையாக கைவிடப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி; சுகாதார சீர்கேட்டில் தவிக்கும் சுருளிப்பட்டி ஊராட்சி


UPDATED : ஆக 19, 2025 09:27 AM

ADDED : ஆக 19, 2025 12:48 AM

Google News

UPDATED : ஆக 19, 2025 09:27 AM ADDED : ஆக 19, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்; சுருளிப்பட்டி ஊராட்சியில் 'ஜல்ஜீவன்' திட்டத்தில் அரை, குறையாக கட்டப்பட்ட மேல் நிலைத்தொட்டி பணிகள் நிறைவு பெறாமல் மூன்று ஆண்டுகளாக முடங்கி யுள்ளது.

கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சி 12 வார்டுகளை கொண்டுள்ளது. இந்த ஊராட்சியில் 5 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது.

கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ள பல வீதிகள், எம்.ஜி.ஆர்., நகர், சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் தெற்கே உள்ள விரிவாக்க பகுதிகள் என பல வீதிகள் குண்டும் குழியுமாகி ரோடு நடக்கவே லாயக்கற்றதாக உள்ளது. ரூ.85 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட ஜல் ஜீவன் திட்டப் பணிகள் அரைகுறையாக கைவிடப்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப பொதுக் கழிப்பறைகள் இல்லை. பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகளும் பரா மரிப்பு இல்லை.

ஆற்றுக்கு செல்லும் பாதையில் இருந்த கழிப்பறையை சுத்தம் செய்து பூட்டி விட்டனர். சேதமடைந்த சமுதாய கூட கட்டடம் இடிக்கப் பட்டுள்ளது.

குப்பையை கையாள ஏற்படுத்தப்பட்ட திடக் கழிவு மேலாண்மை கூடம் மூடப்பட்டு சேகரமாகும். குப்பை ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர். நகரில் சிறு பாலங்கள் உரிய முறையில் கட்டப்படவில்லை.

வீதிகளில் செடி, கொடி வளர்ந்து புதர்போல் வளர்ந்து நடக்கவே முடியாத சூழல் உள்ளது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி அரைகுறையாக உள்ளது. குடிநீர் 4 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. ஊராட்சி கிழக்கு பகுதியில் தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள காலனியை ஊராட்சி கண்டுகொள்வதே இல்லை.

நாராயணத்தேவன்பட்டியையும் சுருளிப்பட்டியையும் இணைக்கும் ரோடு, பாலம் கட்டும் பணி நடைபெறவில்லை. மாதம் ஒருமுறை சாக்கடை சுத்தம் செய்வதால் சுகாதார சீர்கேடு தலை விரித்து ஆடுகிறது.

சீரமைக்காத தெருக்கள் ரவி, சுருளிப்பட்டி: பள்ளி அருகே உள்ள பாலத்தின் மேல்பகுதி சேதமடைந்த இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டுள்ளது.

இதன் மீது செல்லும் வாகனங்கள் கம்பிகள் தடுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். தெரு விளக்கு போதிய அளவில் இல்லை. எம்.ஜி.ஆர். நகரில் தெருக்கள் பராமரிக்க வேண்டும்.

இரு வீதிகளை இணைக்க கட்டப்பட்டுள்ள பாலங்கள் அதிக உயரமாக உள்ளது. தரையில் இருந்து பாலத்தை இணைக்க வேண்டும். பொதுக் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். -

தெருக்களை தோண்டிப் போட்டு இரண்டு ஆண்டுகளாகியும் சீரமைக்க வில்லை. விரைந்து பரா மரிப்பு செய்ய வேண்டும்.

எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தும் பாலம் பணி நடக்கவில்லை மொக்கராஜ், சுருளிப்பட்டி: நாராயணத்தேவன்பட்டி சுருளிப்பட்டி இணைப்பு சாலை,பாலம் கட்ட வேண்டும், இரண்டு எம்.எல்.ஏக்கள் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். ஆனால் இன்று வரை ஒன்றும் நடக்கவில்லை. இந்த பாலம் கட்டப்பட்டால் சுருளி அருவிக்கு செல்ல பைபாஸ் ரோடு போல ஆகிவிடும்.

பகவதியம்மன் கோயில் அருகில் கட்டப்பட்ட குடிநீர் மேல் நிலைத் தொட்டி அமைக்கும் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இப் பணியை நிறைவு செய்து குடிநீர் சப்ளையை துவக்க வேண்டும்.

இது தொடர்பாக ஊராட்சியில் விசாரிக்கையில், ஆற்றுக்கு போகும் பாதையில் உள்ள கழிப்பறையை செயல்படுகிறது . எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரோடு அமைக்க ஒப்பந்தம் எடுத்தவர் முன்னாள் தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பணி செய்யாமல் விட்டு விட்டார்.

தற்போது வேறு ஆட்களை வைத்து சரி செய்து வருகின்றோம். தெருக்கள் பராமரிப்பிற்கு நூறு நாள் வேலை திட்டத்தில் சீரமைக்கப்படும்.

ஜல் ஜீவன் ஒப்பந்தகாரரும் பணிகளை பாதியில் விட்டு விட்டு சென்று விட்டார். துப்புரவு பணியாளர் இல்லை. தூய்மை காவலர்கள் 12 பேர் உள்ளனர் குப்பைகள் அகற்றப் படுகிறது, என்றனர்.






      Dinamalar
      Follow us