/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் காளைகள் பதிவு செய்ய அனுமதி
/
ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் காளைகள் பதிவு செய்ய அனுமதி
ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் காளைகள் பதிவு செய்ய அனுமதி
ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் காளைகள் பதிவு செய்ய அனுமதி
ADDED : பிப் 09, 2024 07:16 AM
தேனி: தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பிப்.,18 ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.
இதில பங்கேற்க விரும்பும் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் http://theni.nic.in என்ற இணையதளத்தில் பிப்., 12 காலை 10:00 மணி முதல் பிப்., 14 இரவு 7:00 மணி வரை பதிவு செய்லாம். வீரர்கள் பதிவில் புகைப்படம், வயது சான்றிதழுடன் பதிவு செய்யபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். மாட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்கள், காளையுடன் கூடிய புகைப்படம், ஆதார், கால்நடை மருத்துவரிடம் பெற்ற காளை உடல் தகுதிச்சான்றுடன் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர் மட்டும் அனுமதிக்கப்படுவார். பதிவு செய்தவர்கள் சான்றுகள் சரிபார்க்கப்படும். அதன் பின் காளைகள், வீரர்கள் அனுமதிகப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மட்டும் டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவர்கள் மட்டுமே ஜல்லிகட்டில் அனுமதிக்கப்படுவர். என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

