/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயணியிடம் அலைபேசி திருடிய வாலிபர் கைது
/
பயணியிடம் அலைபேசி திருடிய வாலிபர் கைது
ADDED : மே 01, 2025 06:59 AM

தேனி: தேனி அன்னஞ்சி மந்தை காளியம்மன் கோயில் தெரு ஜெயபிரகாஷ் 35. கோவை பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் ஏப்.29ல் கோவையில் இருந்து தேனி புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து, டீக்கடை அருகே படுத்துக்துாங்கினார்.
அப்போது தேனி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சந்துரு 19,முத்துப்பாண்டி 20 ஆகிய இருவர் அருகில் வந்து, ஜெயப்பிரகாஷின் பேன்ட் பாக்கெட்டில்இருந்த ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை திருடி ஓடினர். அருகில்இருந்தவர்கள் உதவியுடன் சந்துருவை கண்டிபிடித்தஜெயப்பிரகாஷ், தேனி போலீஸ் எஸ்.ஐ., முருகேசனிடம் ஒப்படைத்தார். அவர் சந்துரு, முத்துப்பாண்டி மீது வழக்குப்பதிந்து, சந்துருவை கைது செய்தார். முத்துப்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.