/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரி மாணவிக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது
/
கல்லுாரி மாணவிக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது
ADDED : ஏப் 11, 2025 05:16 AM
தேனி: பழனிசெட்டிபட்டி அருகே கோபாலபுரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண். அப்பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். ஏப்.9ல் 20 வயது பெண்ணும், கல்லுாரியில் பணியாற்றும் மற்றொரு பெண்ணும், கல்லுாரி செல்ல கோபாலபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது அதேப்பகுதி ஓடைத்தெரு வினோத்குமார் என்ற வாலிபர், இளம்பெண்ணை ஆபாசமாக திட்டினார். இதை கேட்ட பெண் கூச்சலிட்டார்.
அப்போது அந்த வாலிபர், கல்லுாரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகாரில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாளிடம் வினோத்குமாரை 20, கைது செய்தார்.