/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
/
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
ADDED : ஜூலை 25, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் வடக்குரத வீதியைச் சேர்ந்த சீவகன் மகன் பரத் 27. வீட்டில் மகன் கல் எடுத்து எறிவதாக தந்தை கூடலுார் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் விசாரணைக்காக ஏட்டு வாஞ்சிநாதன் சம்பவ இடத்திற்கு சென்றார்.
அங்கு மது போதையில் இருந்த பரத் விசாரணைக்காக வந்த ஏட்டுவின் சட்டையை பிடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஏட்டு ஸ்டேஷனில் புகார் செய்ததைத் தொடர்ந்து பரத்தை கைது செய்தனர்.