/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை
/
டூவீலர் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை
ADDED : ஜூலை 16, 2025 07:13 AM
கம்பம் : கம்பம் நாட்டாமைக்காரர் தெருவை சேர்ந்தவர் செல்வம் 52, குணசேகரி 48 தம்பதியர். இவர்களுக்கு மனோஜ் குமார் 24, மதுமிதா 25 என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மதுமிதாவிற்கு திருமணம் முடிந்து நந்தனார் காலனியில் வசித்து வருகிறார். மனோஜ்குமார் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.
ஒரு வாரமாக மனோஜ்குமார், தனது தந்தையிடம் டூவீலர் வாங்கி தர கோரி அடம்பிடித்துள்ளார். தந்தை டூவீலர் வாங்கி தராததால் நேற்று முன்தினம் இரவு மனோஜ்குமார் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னால் சென்ற தந்தை, மகனை சமாதானம் செய்து, காலையில் டூவீலர் வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்தார்.
வீட்டிற்குள் மகனை படுக்க வைத்துவிட்டு வெளி திண்ணையில் தந்தை படுத்துள்ளார். அதிகாலை எழுந்து வீட்டிற்குள் பார்த்த போது, மனோஜ்குமார் வேட்டியால் துாக்கிட்டுள்ளார். தகவலின்பேரில் கம்பம் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.