ADDED : ஜன 18, 2025 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அன்னஞ்சி மூணுசாமி கோயில் தெரு பாண்டியன் மகன் அருண்குமார் 23. இவரது டூவீலரில் தனது நண்பர் வடபுதுபட்டி கல்லுாரி ரோட்டை சேர்ந்த ரஞ்சித்குமாரை 22, ஏற்றிக் கொண்டு அன்னஞ்சி பைபாஸ் ரோடு கடலை மிட்டாய் கடை அருகே சென்றனர்.
அப்போது ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் தெரு பாண்டியன் 62, ஓட்டி வந்த தனியார் மில் பஸ் மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்தில்இறந்தார். ரஞ்சித்குமார் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்.போலீசார் விசாரிக்கின்றனர்.