/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்து அதிகரிப்பால் தண்ணீரில் மூழ்கி இளைஞர் பலி
/
வரத்து அதிகரிப்பால் தண்ணீரில் மூழ்கி இளைஞர் பலி
ADDED : ஜூன் 18, 2025 04:43 AM

மூணாறு: இடுக்கி மாவட்டம் மூலமற்றம் அருகே திருவேணி சங்கமத்தில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
மூலமற்றம் அருகே மூன்று நீர் நிலைகள் இணையும் இடத்தை திருவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது.
அங்கு குளிப்பதற்கு மூலமற்றம் பகுதியைச் சேர்ந்த அதுல் 19, நண்பர் நிதிஷ் 19, ஆகியோர் சென்றனர். இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் அதுல் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.
அதனை பார்த்து காப்பாற்றச் சென்ற நிதிஷூம் சுழலில் சிக்கிக் கொண்டார். மூலமற்றம் தீயணைப்புதுறையினர் பொதுமக்களின் உதவியுடன் நிதிஷை மீட்டனர்.
தண்ணீரில் மூழ்கிய அதுல் காணாமல் போனார். தொடுபுழாவைச் சேர்ந்த 'ஸ்கூபா' குழுவினர்தண்ணீருக்குள் தேடி அதுலின் உடலை மீட்டனர்.