ஆண்டிபட்டி: சித்தார்பட்டியை சேர்ந்தவர் பழனித்தாய், இவரது கணவர் பாலகிருஷ்ணன் இரு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களின் மூன்று மகன்களில் இருவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது.
மூன்றாவது மகன் பிரதாப் 23, தனது தாய் பழனித்தாயுடன் போடியில் வாடகை வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்தார். இந்நிலையில் பிரதாப் சித்தார்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் ரெங்கலட்சுமியை காதலித்து ஆகஸ்ட் 20ல் திருமணம் செய்துள்ளார். இது குறித்து ரெங்கலட்சுமியின் தாயார் பின்னம்மாள் போடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
விசாரணையில் ரெங்கலட்சுமி தனது தாயாருடன் செல்வதாக கூறி சென்று விட்டார். அதன் பின் மனவருத்தத்தில் இருந்த பிரதாப் தனது தாயாருடன் போடியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். தனது தாயிடம் சொல்லாமல் பிரதீப் சித்தார்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனித்தாய் புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.